மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்! பொலிஸாரால் மூடப்பட்டது வளாக வாயில்கள்

158shares

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலை கட்டடங்களை அமைப்பதற்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்று வந்தன.

இதன் போது அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள் மாங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் விடயம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சற்று முன்னர் குறித்த இடத்திற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் அந்த இடத்தை பார்வையிட்டார்.

அப்பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் புகைப்படம் வீடியோ எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சம்பவத்தை செய்தி அறிக்கையிட சென்ற ஊடகவியலாளரை வீடியோ புகைப்படம் எடுக்கவிடாது மாங்குளம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் தள்ளி குறித்த வளாகத்தை விட்டு வெளியேற்றிய நிலையில் குறித்த வளாக வாயில் கதவினை கண்ணிவெடியகற்றும் பணியாளர்கள் மூடியுள்ளனர் என்பது சுட்டிக்காட்டதக்கது.


you may like this
இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்