கொரோனாவை கட்டுப்படுத்த முடியாவிட்டால்? எச்சரிக்கும் மருத்துவர்- மதிய நேரச் செய்திகள்

255shares

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாவிட்டால் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் பாதிப்படைவார்கள் என ஹாங்காங்கின் உயர் மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் 44ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் பல்வேறு நாட்டு நிபுணர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வைரஸ் ஆரம்பித்த இடமாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரம் முழுவதும் மூடப்பட்டு, போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளார்.

சீனா மற்றும் அதன் பல பகுதிகளில் இருந்து திரும்பிய கப்பல்கள் தனிப்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நகரத்தின் பொது சுகாதார மருத்துவத்தின் தலைவரான பேராசிரியர் கேப்ரியல் லியுங், இறப்பு விகிதம் ஒரு சதவீதத்தை எட்டியிருந்தாலும் கூட, பரவக்கூடிய பரவலானது ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்லக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

இதனை கட்டுப்படுத்த முடியாவிட்டால், 'உலக மக்கள் தொகையில் 60 முதல் 80 சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடும் என பேசியுள்ளார்.

இது போன்ற பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகள்,

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்