மைத்திரி -ரணில் ஆட்சியில் இறக்குமதியான வாகனங்கள் - சிஐடியிடம் சென்ற ஜே.வி.பி

6shares

மைத்திரி -ரணில் தலைமையிலான ஆட்சியின் போது அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து இன்றையதினம் சிஐடியிடம் ஜேவிபி எம்.பி. டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

2015 ஜனவரி 08 முதல் 2019 நவம்பர் 30 வரை 78 உயர் மதிப்புள்ள சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்பதும் தெரிய வந்துள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களுக்கு 1.65 பில்லியன், ராஜாங்க அமைச்சர்களுக்கு ரூ .652 மில்லியன், பிரதி அமைச்சர்கள் வாங்கிய வாகனங்களுக்கு ரூ. 564 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ சிஐடியிடம் புகார் அளித்தார்.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கணக்கில் 100,000 அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடங்குமாறு தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான புகார் ஒன்றை முகமது முசம்மில் இன்று பொலிஸ் தலைமையகத்தில் அளித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி