ரணிலை ஓரங்கட்டி சஜித் தலைமையில் இணைந்துள்ள கட்சிகள்

105shares

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தலைமையில் தாம் களமிறங்கவுள்ளதாக பாட்டலி சம்பிக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தீர்மானகரமான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பதவியேற்றுள்ள இன்றைய அரசு வெகு சீக்கிரமாகவே மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அரசியல் பழி வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

நாம் சமகாலத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் அதனூடாக பல்வேறு வெற்றிகளையும் பெற்றுள்ளோம். இந்த பின்னணியில் எதிர்வரும் தேர்தலை புதிய ஒரு கூட்டணியாக எதிர்கொள்ள ஐதேகவின் செயற்குழு தீர்மானித்து, அந்த கூட்டணியின் தலைமை, கூட்டணி பொது செயலாளரை தீர்மானிக்கும் அதிகாரம், பிரதமர் வேட்பாளர், வேட்பாளர் தெரிவு குழு தலைமை ஆகியவற்றை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கிட முடிவுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த முடிவுகளை எம் கவனத்தில் எடுத்து, சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமாகும் புதிய பரந்துபட்ட கூட்டணியில் எமது கட்சிகள் இணைந்து செயற்படுவதை நாம் உறுதி செய்கிறோம்.

அதன்படி, ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் கரங்கோர்த்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கூட்டணியில் செயற்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

பாடலி சம்பிக்க ரணவக்க

பொதுசெயலாளர் – ஜாதிக ஹெல உறுமய

மனோ கணேசன்

தலைவர் – தமிழ் முற்போக்கு கூட்டணி

ரவுப் ஹக்கீம்

தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி