இந்திய பயணத்தின்போது அரசின் பணத்தை பயன்படுத்தியதா மகிந்த குடும்பம்?

36shares

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அரசு நிதியைப் பயன்படுத்தியதாக தான் நம்பவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்தன ஒரு தெரிவித்துள்ளார்.

இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விமான டிக்கெட் உள்ளிட்ட அவர்களின் செலவுகளுக்கு அவர்கள் தனிப்பட்ட முறையில் தமது பணத்தையே செலவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டு பயணங்களை குறைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தான் கடந்த காலத்தில் மூன்று வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டதாகவும் எனினும், அரசாங்க பணத்தைப் பயன்படுத்தவில்லை என்றும் பந்துல குணவர்தன கூறினார்.

இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ரமேஷ் பதிரண, மூன்று வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த மூன்றிலும் சேரவில்லை என்றும் அவர் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...