ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்

81shares

சிரேஷ்ட பிரஜைகள்தங்களது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை தவிர்த்து புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வழிகாட்டுதலில் அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவினால் இந்த புதிய இலகு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் பிரதேச செயலாளரின் கையொப்பத்துடன் கிராமசேவகர் ஊடாக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு தங்கள் வாழ்க்கைச் சான்றிதழ்களை அனுப்ப வேண்டியிருந்தது.

இந்த நடைமுறையானது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

இதனால் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிறுவப்பட்டுள்ள புதிய கைரேகை இயந்திரத்தில் ஓய்வூதியம் பெறுவோர் தமது கைரேகையை ஒரு தடவை பதிவு செய்வதன் மூலம் இவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் ஓய்வூதியத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்த அறிமுக விழா நேற்று ஓய்வூதியத் திணைக்களத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி