தமிழர் தலைநகரில் திருடர்கள் சென்ற மடக்கிப் பிடித்த அதிகாரிகள்

75shares

திருகோணமலையில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைக்குண்டு மற்றும் வாள்களுடன் கந்தளாய் குற்ற விசாரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை நேற்று இரவு கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை நகரிலுள்ள இரண்டு அலைபேசி கடைகளையும், கந்தளாயில் உள்ள ஒரு அலைபேசி கடையையும் உடைத்து அலைபேசிகள், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மீள்நிரப்பு அட்டைகள்,இரண்டு மடிக்கணணிகள்,பற்றரிகள்,சாச்சர்,ஒரு இலட்சம் ரூபா பணம் போன்றவற்றை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நால்வரும் தம்பலாகாமம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் காத்தான்குடி, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 25,18,19 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பயணித்த காரை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதில் இருந்து கைக்குண்டு, வாள்கள், சிறிய கத்தி, மடிக்கணணி 2, பணம், அலைபேசிகள், மற்றும் பூட்டுகளை உடைக்கும் கருவி போன்றன கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

loading...