2009இல் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து 11 வருடங்களின் பின் மனம் திறந்த சங்ககார

54shares

2009 மார்ச் மூன்றாம் திகதி லாகூரில் இலங்கை அணியினரின் பேருந்தினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை என்றும் மறக்க முடியாத அனுபவம் என குமார்சங்ககார தெரிவித்துள்ளார்.

எம்சிசி அணிக்கு தலைமை தாங்கி 11 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் சென்றுள்ள குமார் சங்ககார லாகூர் குலான்டர்ஸ் அணியுடன் இன்று ரி20 போட்டியில் விளையாடவுள்ளார்.

பாகிஸ்தானில் அன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து எனக்கு எந்த பிளாஸ்பாக்குகள் தேவையில்லை என தெரிவித்துள்ள அவர் நான் அன்றைய நாளை மிகவும் தெளிவாக நினைவில் வைத்திருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அந்த நாள் நினைவுகளில் நான் வாழ்வதில்லை,என குறிப்பிட்டுள்ள சங்ககார அந்த நாள் என்னை மனவேதனைக்கு உட்படுத்துவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய நாளில் இடம்பெற்ற விடயத்தினை இலங்கை அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களிற்கு உரித்தான வழிமுறைகள் மூலம் கையாண்டார்கள் என தெரிவித்துள்ள சங்ககார ஆனால் நீங்கள் நெருக்கடிகளை சந்திக்கும்போது,சவால்களை சந்திக்கும்போது நீங்கள் அதனை வெற்றிகரமாக கடந்து செல்லவேண்டும் அதுவே எங்களை ஐக்கியப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் லாகூர் தாக்குதல் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதால் நீங்கள் உண்மையான வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் ஏனையவர்களின் அனுபவங்களில் இருந்தும் தப்பமுடியாது என்ற உண்மையை உணர்த்தியது என குறிப்பிட்டுள்ள குமார் சங்ககார அது உண்மையில் எங்களை பலப்படுத்தும், எங்களை பணிவானவர்களாக்கும், பலவிடயங்களை அர்த்தப்படுத்தும் அனுபவமாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் அதிவேகத்தில் வலம் வரும் இளைஞர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி