கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மகிந்தவின் சகா கைது!

202shares

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் மஹிந்தவின் நெருங்கிய சகாவுமான உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 மணியளவில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்க்கப்படுகின்றது.

இலங்கை வந்த அவரிடம் தற்போது சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின்போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு கடந்த அரசாங்கத்தால் பிடியாணையும் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

2016.10.20 ஆம் திகதி அப்போ­தைய கோட்டை நீதி­வா­னாக இருந்த லங்கா ஜய­ரத்ன குற்றவியல் சட்­டத்தின் 63 (1) அ பிரிவின் கீழ் உதயங்க வீரதுங்கவை, சர்­வ­தேச பொலி­ஸாரின் உத­வி­யுடன் கைது செய்­வ­தற்­கான சிவப்பு அறிவித்தல், பிடி­யா­ணையை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உதயங்க வீரதுங்க இன்று இலங்கைக்கு வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

பூப்புனித நீராட்டு விழாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால  ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

எல்லை மீறும் கொரோனா -இங்கிலாந்தில் நான்கு வார கால ‘லொக் டவுனை’ அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி

“9 பேரை கொலை செய்யப்போகின்றேன்” எனக் கூறி தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி