அரச அதிகாரிகளை அவமதிக்கும் செயலில் பொதுஜன பெரமுனவின் தமிழ் பகுதிக்கான இணைப்பாளர்!

78shares

வவுனியாவில் இடம்பெறும் ஒருங்கிணைப்புகுழு கூட்டங்களில் பொதுஜன பெரமுனவின் தமிழ் பகுதிக்கான இணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக செயற்பட்டு கூட்டத்தினை அவரே நடத்துவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்புகுழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தினவுடன் வருகை தந்த அவரின் இணைப்பாளரும் பொதுஜன பெரமுனவின் தமிழ் பகுதிக்கான இணைப்பாளருமான நபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் இடத்தில் இருந்து கூட்டத்தினை நடத்தியமை அரச அதிகாரிகளை அவமதிக்கு செயல் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை அதன் தலைவர் நடத்த வேண்டிய போதிலும் வவுனியாவில் இடம்பெறும் கூட்டங்களை தலைவரின் இணைப்பாளரே நடத்துவதாகவும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக முன் மேடையில் அமர்ந்திருப்பதாகவும் விசனம் தெரிவித்தினர்.

ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கு மொழி பெயர்ப்பு தேவையேற்படின் ஒலிவாங்கியூடான மொழிபெயர்ப்பு செய்ய கூடிய வசதிகள் இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகராக அவர் முன்மேடையில் இருந்து அரச அதிகாரிகளை கட்டுப்படுத்துகின்றமை தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...