ஞானசார தேரரின் கருத்து மீண்டும் ஈழப்போராட்டத்திற்கு வித்திடும்! எச்சரிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

160shares

ஞானசார தேரரின் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தானது ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

“பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருப்பதானது நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதித்து நாட்டை துண்டாடி பிரிவினைவாதத்தை முன்வைப்போருக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதுடன் ஈழ போராட்டம் முன்னெடுப்பதை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன.

ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையினை நிறைவேற்றுவதற்கு முழு ஒத்துழைப்பினையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும் என விசக்கருத்தை விதைத்திருக்கிறார்.

தமிழ் மக்களின் தேச வழமை சட்டம், முஸ்லீம்களின் விவாக விவாகரத்து சட்டம், சிங்களவர்களின் கண்டிய சட்டம் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கா வண்ணம் நாட்டின் இறையாண்மையை மதித்து சந்தோசமாக வாழும் மூவின மக்களையும் பிரித்து, நாட்டை சீரழிக்கும் வேலைத்திட்டத்தை வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்காக ஞானசார தேரர் முன்னெடுக்கின்றாரா என சந்தேகம் எழுகின்றது.

நாட்டின் முக்கியமான தேர்தல் ஒன்று நெருங்கும் நேரத்தில் இவ்வாறான கருத்துகளை தெரிவித்து நாட்டின் இறையாண்மையை முற்றிலும் பாதிக்க அவர்களை போன்ற தீய சக்திகளுக்கு இடமளிக்க முடியாது” என்றார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...