கல்குடாவில் கரையொதுங்கிய இனந்தெரியாத பெண்ணின் சடலம்!

32shares

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை கரை ஒதுக்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்மடு கடற்கரைக்கு இன்று காலை மீனவர்கள் சென்றிருந்த போது இனந்தெரியாத ஐம்பத்தைந்து, அறுபது வயது மதிக்கத்தக்க வயோதிப பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

சடலத்தினை பார்வையிட்ட மீனவர்கள் கிராம அதிகாரிக்கு தெரியப்படுத்தியதன் பிரகாரம் கல்குடா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணின் சடலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரையொதுங்கி இருக்கலாம் என்றும், குறித்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் கிராம அதிகாரி க.கிருஸ்ணகாந்த் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெவித்தார்.

இனந்தெரியாத வயோதிப பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு