நீதிமன்றில் ரிஷாட்டின் மனைவி தொடர்பில் இரகசிய பொலிஸார் வெளியிட்ட தகவல்!

141shares

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீனின் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்தே கைப்பற்றப்பட்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக குற்றத்தடுப்பு பிரிவினர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் தெரிவித்துள்ளனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் சதொச பல்பொருள் அங்காடி உட்பட பல்வேறு வணிகம் சார்ந்த நிறுவனங்களை வகித்த முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் பல மோசடிகளை செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் விருத்தி அமைச்சரான விமல் வீரவன்ச அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது, கடந்த ஆட்சியின் கீழ் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீனின் அமெரிக்காவிலுள்ள வங்கிக் கணக்கிற்கு இலங்கையிலிருந்து ஒருஇலட்சம் டொலர்கள் வைப்பிலிடப்பட்டமை குறித்து விசாரணை அவசியம் என வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இதுகுறித்து விசாரணை கோரி நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சதொச கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர். கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் பதியுதீனின் மனைவியின் இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய சோதனையில் இந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு, அந்த வீட்டிலிருந்த இம்ரான் மொஹமட் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

குறித்த நபரும் பல்வேறு நிதிமோசடியில் சிக்கியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்கிஸை நீதிமன்றத்தில் இன்றைய தினம் சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர். குறித்த இல்லத்திலிருந்து 09 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான பொருத்தனை பத்திரங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த ஆவணங்கள் மற்றும் பத்திரங்கள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்றைய தினம் சமர்பித்திருந்தனர். அதேபோல, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமும் இதுகுறித்த மேலதிக விசாரணைக்காக வாக்குமூலம் பதிவுசெய்யவிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபரான இம்ரான் மொஹமட்டை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!