உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

15shares

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஹாம் அஹமட்டின் தந்தை உள்ளிட்ட 6 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் உள்ளிட்ட நட்டசத்திர ஹொட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதற்கமைய சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் ஹில்ஹாம் அஹமட், பிரபல வர்த்தகரான மொஹமட் யூசுவ் மொஹமட் இப்ராஹிமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவரது மற்றுமொரு மகனான மொஹமட் இப்ராஹிம் இன்ஃசாப் அஹமது சினமன்காடன் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தார்.

மேலும் தெமட்டகொடையிலுள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து வர்த்தகரான மொஹமட் யூசுவ் மொஹமட் இப்ராஹிம் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

மரக்கறிகடைகளுக்குள் திடீரென சென்ற கோட்டாபய

மரக்கறிகடைகளுக்குள் திடீரென சென்ற கோட்டாபய

loading...