மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குள் நுழைந்த புலி!

80shares

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்லோ தோட்டப் பகுதியில் வலையில் சிக்குண்ட சிறுத்தைப் புலி ஒன்று உயிருடன் மீட்கப்ட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு 10 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வேட்டையாடுவதற்கு விரிக்கபட்ட வலையில் சிக்குண்டு உயிருக்குப் போராடி கொண்டிருந்த சிறுத்தைப் புலி தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலுக்கு அமைய மஸ்கெலியா பொலிஸாரின் ஊடாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் குறித்த சிறுத்தைப் புலியினை உயிருடன் மீட்டு ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கி வருவதாகவும் குறித்த சிறுத்தைப் புலிக்கு வயிற்று பகுதியில் பாரிய காயம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சிறுத்தைபுலி ஏழு அடி நீளம் கொண்ட ஆண் சிறுத்தை புலி என நல்லதண்ணி வனவிலங்குஅதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுத்தைப் புலிக்கு சிகிச்சை வழங்கி மீண்டும் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடபடவுள்ளதாகவும் சிறுத்தை புலிக்கு வலைவிரித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்