யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்

489shares

யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் சாதகமான முடிவை மேற்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் விமானப் போக்குவரத்து அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இதில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்ற சென்னை விமான நிலையத்திற்கான விமானப் போக்குவரத்திற்காக பயணிகளிடம் இருந்து பெருந் தொகையான விமான நிலைய வரி அறவிடப்படுகின்றமை தொடர்பாக 02.01.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

கட்டுநாயக்கா விமான நிலையத்துடன் ஒப்பிடுகின்றபோது குறைந்த தூரத்தைக் கொண்ட யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளிடம் இருந்து விமான நிலைய வரி இரண்டு மடங்காக அறவிடப்படுவதற்கு ஐ.தே.மு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த கூட்டரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண மக்களுக்கு எதிரான இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையின் நியாயத்தினை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏகமனதாக தீர்மானித்தது. அந்த வகையில் விரைவில் குறித்த சேவைக்கட்டணம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

தவறான தகவல் -ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்