ஸ்ரீலங்கா வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

100shares

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக பரிசீலிக்க இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை சென்று வருகின்றனர்.

இந்நிலையில், விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டம் ஏப்ரல் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு, விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டத்தின் மூலம் 10 முதல் 12 சதவீதம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதையடுத்து. விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டத்தை மேலும் 3 மாதத்துக்கு நீட்டிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி