இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா அதிரடி காட்டியதன் பின்னணி என்ன? இராணுவத் தளபதிக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?

759shares

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளதாக, அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

இலங்கையின் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் காரணமாக அவருக்கான தடை அமுலுக்கு வருகிறது.

குறிப்பாக 2009 இல் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கு வெளிநாட்டு அதிகாரியொருவர் பாரிய மனித உரிமை மீறல்கள் அல்லது பாரிய ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் கிடைத்தால் அந்த நபரும் அவருடைய குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் என இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 தெரிவிக்கின்றது.

சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிப்பதற்கு அப்பால் அவருடைய குடும்பத்தவர்களிற்கு எதிராகவும் பயணத்தடைவிதிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளும் ஏனைய அமைப்புகளும் முன்வைத்துள்ள ஆவணப்படுத்தியுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மை மிக்கவை என குறிப்பிடுகிறது.

இதேவேளை, இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகளுடன் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாகவே அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அவர் தகுதியற்றவர் என அறிவித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களிற்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்