முடிந்தால் நிரூபித்துக்காட்டுங்கள்! பதவியை துறந்த யாழ்.அரசாங்க அதிபர் சவால்

513shares

நான் ஒரு அரசியல் கட்சி சார்ந்து வேலை செய்தேன் என யாராவது நிரூபிக்க முடிந்தால் நிரூபித்து காட்டட்டும் என பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் சவால் விடுத்துள்ளார்.

பதவிக்காலம் இன்னமும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், தனது பதவியிலிருந்து விலகுவதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் வேதநாயகன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவருக்கு நேற்று மதியம் பிரியாவிடை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்பின்னர் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

எனக்கு அரசியல் அபிலாசைகள் இருக்கின்றதே தவிர நான் ஒரு அரசியல் கட்சியினை சேர்ந்தவன் அல்ல. எந்தவொரு அரசியல் கட்சி சார்பாக நடக்கவும் இல்லை.

எனது சேவையினை நேர்மையாகவே செய்திருக்கிறேன். நான் ஒரு அரசியல் கட்சி சார்ந்து வேலை செய்தேன் என யாராவது நிரூபிக்க முடிந்தால் நிரூபித்து காட்டட்டும்.

இதேவேளை, எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி