தமிழீழ விடுதலைப்புலிகளே உலகத்திலுள்ள மிக சக்திவாய்ந்த அமைப்பு- ராஜபக்ஷ அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்!

124shares

வடக்கு கிழக்கில் இனவாத ரீதியில் புதிய கூட்டணிகள் உருவாக்கப்பட்டாலும் மீண்டுமொரு மோதல் ஏற்படும் வகையிலான சூழல் ஏற்படுவதற்கு அரச தலவைர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் இடமளிக்காது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

உலகின் மிக சக்தி வாய்ந்த போராட்டத்தை தோற்கடிப்பு செய்ததை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நினைவுப்படுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடமாகாணத்தில் புதிய அரசியல் கூட்டணி கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த புதிய அரசியல் கூட்டணி குறித்து தென்னிலங்கையிலும் அதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கண்டியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் கூட்டணி குறித்து விமர்சனம் வெளியிட்டார்.

இது தொடர்பில் அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கில் இன்னும் இனவாத அமைப்புக்களும் கூட்டணிகளும் உருவாகலாம், உலகத்திலுள்ள மிக சக்திவாய்ந்த அமைப்பினை வீழ்த்திய எங்களுக்கு அது சவாலாக அமையாது. அதனால் இனவாத அடிப்படையான சக்திகள் எமது ஆட்சிக்காலத்தில் மலர இடமளிக்கமாட்டோம்.

விக்னேஸ்வரனுக்கு கடந்தகால சம்பவங்களை சற்று நினைவுப்படுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளே உலகத்திலுள்ள மிக சக்திவாய்ந்த அமைப்பு என்று அறியப்பட்டது. எனினும் எமது படையினர் அந்த சவாலைப் பெற்று நாட்டிற்கு நீதியை ஏற்படுத்தினார்கள்.

அதனால் அப்படிப்பட்ட படையினர், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அரச தலைவர் இருக்கின்ற இந்த நாட்டில் இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது பிரச்சினையாக அமையாது எனவும் அவர் தெரிவித்தார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்றிய கொரோனா

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்றிய கொரோனா