சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்களுக்கு விடுதலை

14shares

சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து அழைத்துவரப்பட்டு தியத்தலாவை விசேட இராணுவ மருத்துவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 33மாணவர்களும் நேற்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து இராணுவத் தலைமையகத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் நடைபெற்ற சினேகபூர்வமான சந்திப்பின் பின்னர் தமது வீடுகளுக்கு சென்றதாக இராணுவப் பேச்சாளர் சந்தன விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் கடந்த மாதம் 31ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 33மாணவர்களும் கடந்த 14 நாட்களாக தியத்தலாவையில் அமைக்கப்பட்டிருந்த விசேட இராணுவ வைத்திய முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மாணவர்கள் கொண்டுவந்திருந்த உடைகள், பொருட்கள் என அனைத்தும் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அவர்களுக்கு மீண்டும் அவை கையளிக்கப்பட்டன.

இராணுவ வைத்தியர் பிரிகேடியர் சவீன் மேமசிங்க தலைமையிலான விசேட வைத்திய நிபுணர் குழு இந்த மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனைகளை செய்திருந்தது.

மாணவர்கள் இராணுவத் தளபதியுடன் சினேகபூர்வமான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, இக்கட்டான சூழலில் தம்மை இலங்கைக்கு அழைத்துவர அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், இராணுவத்தினர், விமானப் படையினர், சீனாவிலுள்ள இலங்கைக்கான தூதுவர், இலங்கையில் உள்ள சீனத் தூதுவர், சீன அரசாங்கம் உட்பட தங்களை இலங்கைக்கு அழைத்துவர முயற்சிகளை எடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இராணுவத் தளபதியிடம் மாணவர்கள் கூறினர்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...