ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நன்றி! ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியின் தகவல்

62shares

நாட்டு மக்களின் நலனில் கருத்தில் கொண்டு செயல்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நன்றி என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (14) இடம்பெற்றது.

இந்நிகழ்வு அக்குரேகொட இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய அவர்,

இலங்கை இராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றி இது. நாட்டு மக்களை கருத்தில் கொண்டு செயற்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நன்றி தெரிவிப்பது கடமைக்குரியது.

ஜனாதிபதியின் இந்த செயற்பாடு உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

கொரோனாவின் எதிரொலி! சீன அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு- உடனடியாக விடுக்கப்பட்டுள்ள உத்தரவு

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

loading...