யாழில் பரிதாபமாக உயிரிழந்த 4 மாத பெண் குழந்தை!

327shares

வயிற்றோட்டம் காரணமாக 4 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தொடர்ச்சியாக காணப்பட்ட வயிற்றோட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 4 மாத பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயர்ந்துள்ளது.

நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த எமனேஸ்வரம் திருவிக என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு எட்டாம் திகதி திடீரென வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து குழந்தையின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை அனுமதித்தனர்.

எனினும் குழந்தை இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!