விக்னேஸ்வரனுடன் இணையாதமைக்கு உண்மையான காரணத்தை போட்டுடைத்தார் கஜேந்திரகுமார்

324shares

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார்.

இந்த விடயம் எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதை குறிப்பிட்டுள்ளார்.

மேலும். கூட்டு என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை இலங்கையில் இருந்தபோது அதற்கு ஒரு ஒட்டுக்குழுவாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியின் ஒரு உறுப்பினராகத்தான் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என்றும் தெரிவித்தார்.

இந்த முயற்சிகள் அனைத்துமே, வேறு தரப்பின் நலன்களை கருத்திற்கொண்டு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர் இது மக்களின் நலன்களுக்காக அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வரக்கூடிய வாக்கு வங்கியை உடைக்க மக்களைக் குழப்பும் நோக்கத்துடன் அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று மேலும் தெரிவித்தார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை