அமெரிக்காவின் தடைக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் யார்? பின்னணியை உடைத்தார் டியூ குணசேகர

391shares

சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரே காரணமாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் தடையானது எமது நாட்டின் கெளரவம் மற்றும் இறையாண்மைக்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர மற்றும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரே காரணமாக இருக்கிறார்கள்.

யுத்தக்குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க தீர்மானித்தது. அதற்கான ஆவணத்தில் மங்கள சமரவீர கைச்சாத்திட்டிருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே மங்கள சமரவீர இதனை மேற்கொண்டிருந்தார். அன்று மங்கள சமரவீர கைச்சாத்திட்டதன் பின்விளைவேயே தற்போதும் நாங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கின்றோம்” என்றார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்! மீண்டும் துளிர்விடும் கொரோனா?

சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்! மீண்டும் துளிர்விடும் கொரோனா?