யாழ்.சர்வதேச விமான நிலையம் தொடர்பில் மஹிந்தவுக்கு பறந்த அவசர கடிதம்

313shares

யாழ்.சர்வதேச விமானத்தினூடான பயணத்தின் அதிகரித்த கட்டணத்தைக் குறைக்குமாறும் இந்திய நாணயத்தை மாற்றுவதற்கேற்ற வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான இ.ஜெயசேகரன் அவசர கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் கடந்த 11.11.2019 திகதி தனது முதலாவது விமான சேவையினை ஆரம்பித்ததிலிருந்து விமான பயணசீட்டுக்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.

இது கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் சில இந்திய விமான நிறுவனங்களின் கட்டணத்தை விட அதிகமாக காணப்படுகிறது.

இது வடமாகாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற வசதிகள் இங்கே இல்லை.

அத்துடன் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப் பொதியாக சுமார் 15 கிலோவும், கையில் எடுத்துச் செல்லக்கூடியதாக 5 கிலோவுமாக 20 கிலோ மட்டுமே கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல முடியும்.

இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி ஒருவர் தனது விமானப் பயணத்தின் போது பயணப்பொதியாக சுமார் 30 கிலோவும், கையில் எடுத்துச் செல்லக்கூடியதாக 7 கிலோவுமாக 37 தொடக்கம் 40 கிலோ வரையான பயணப்பொதிகளை கொண்டுவர அல்லது எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஆகவே இப்படியான பல வசதி குறைபாடுகளுடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணிக்கும் பயணி ஒருவருக்கு அதிகளவான கட்டணத்தினை அறவிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

இது ஒரு பிராந்திய வசதி குறைந்த விமான நிலையம். ஆகையால் விமான பயணச்சீட்டுடன் சேர்த்து அறவிடப்படும் விமான நிலைய வரியினை 50வீதம் குறைப்பு மேற்கொள்ளுமிடத்தில் பயணிகள் குறைந்த தொகைக்கு விமானப் பயணச் சீட்டினை பெறக்கூடியதாக இருக்கும்.

இதன் மூலம் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களைச் சேர்ந்த அதிகளவான பயணிகள் பயன்பெறக்கூடியதாகவும் இருக்கும். எனவே பயணிகளின் விமானச்சீட்டுக்களின் விலையினை குறைத்து அவர்கள் பயன்பெற தாங்கள் ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் இலங்கையில் 14 நாட்டு நாயணங்களை இலங்கையில் உள்ள வங்கிகளில் மாற்றுவதற்கு அல்லது வங்கிகளில் பெறமுடியுமென மத்திய வங்கியின் சுற்றுநிரூபம் கூறுகிறது.

ஆனால் நாள் தோறும் இலங்கையிலிருந்து பெருந்தொகையான பயணிகள் இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் விமானம் மூலம் பயணிக்கின்றார்கள்.

ஆனால் இந்திய ரூபாவை எடுத்துச்செல்லவோ அல்லது அங்கிருந்து எடுத்துவரவோ சட்டரீதியான அனுமதி இல்லை. இதன் மூலம் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.

ஆகையால் பிரதமர் மற்றும் நிதியமைச்சராகிய தாங்கள் இதனை கருத்திற்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாவை இலங்கையில் உள்ள வங்கியில் பெறுவதற்கும்,

மாற்றுவதற்கும் மற்றும் எடுத்து செல்வதற்கும் தாங்கள் ஆவன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

இதன் மூலம் இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி வெளியேறும் போது தங்கள் அத்தியாவசிய தேவைக்காக இந்தியப்பணத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகையால் இதை தாங்கள் சட்ட ரீதியாக அமுல்படுத்த ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன் என்றுள்ளது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!