அரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதியளித்து கோட்டாபய ஆட்சிபீடம் ஏறவில்லை!

166shares

"இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றனர். அரசியல் தீர்வு குறித்து அரசுக்கு இவர்களால் அழுத்தம் பிரயோகிக்கவே முடியாது."

இப்படிக் கூறினார் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சருமான லக்ஸ்மன் யாபா அபேவர்தன.

"அரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறவில்லை" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு அனைத்து இன மக்களுக்கும் முரண்பாடு ஏற்படாத வகையிலேயே தீர்வுகளை நாம் வழங்குவோம். சாய்ந்தமருது நகர சபையும் அவ்வாறே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இனத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இந்தத் தீர்மானத்தை அரசு எடுத்தது. எனவே, அனைத்த இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். நாட்டில் மீண்டும் இனவன்முறை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புகின்ற தீர்வுகளை எம்மால் வழங்க முடியாது" - என்றார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!