கொரோனாவிலிருந்து சீனப் பெண்ணை முழுமையாக குணப்படுத்திய ஸ்ரீலங்கா! வியப்பில் உலக மக்கள்

252shares

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சீன பெண் பூரணமாக குணமடைந்து சற்று முன்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

குறித்த பெண்ணை வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையிலிருந்து வெளியேறும்போது சீன பெண் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அன்பானவர்களால் நிறைந்த ஒரு நாடாகும். 26 நாட்கள் என்னை மிகவும் அன்புடன் இலங்கை வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பராமரித்தனர்.

கொடிய நோயில் பாதிக்கப்பட்ட என்னை இறுதியில் குணப்படுத்திவிட்டார்கள். எனது முழு மனதோடு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை அன்பாக பார்த்துக் கொண்ட வைத்தியர்கள் உட்பட பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கைக்கு நான் மீண்டும் வருவேன். எனது நண்பர்களையும் வருமாறு கூறுவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து வந்த 43 வயதான பெண், ஜனவரி 27 ஆம் திகதி கொரோனா வைரஸுக்கு சாதகமான பரிசோதனை செய்து அங்கோடாவில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!