கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

533shares

இன்று இரவு 7 மணியளவில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தை துரத்திசென்ற பொலிஸார் அதனை இடைநிறுத்தி பேருந்தில் இருந்த இளைஞர் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து 3கிலோ 720 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஈரட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது துரத்தி சென்று ஈரட்டை பகுதியில் வழிமறித்து இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 3கிலோ 720கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.

சாஸ்திரி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா தேவராஜ் என்ற 24வயதுடைய இளைஞனை கைது செய்த போக்குவரத்து பொலிஸார் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்! மீண்டும் துளிர்விடும் கொரோனா?

சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்! மீண்டும் துளிர்விடும் கொரோனா?