மனைவி வெளிநாட்டில் உள்ள நிலையில் ஸ்ரீலங்காவில் கொலை செய்யப்பட்ட கணவர்!

542shares

மனைவி வெளிநாட்டில் உள்ள நிலையில் கணவன் திருகோணமலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பத்தினிபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (20) இரவு இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு வயல் காவலுக்கு சென்ற சந்தேக நபரும், மாடு பட்டி பார்க்கச் சென்ற கொலை செய்யப்பட்ட நபரும் மது அருந்திய நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கை கலப்பாக மாறிய நிலையில், கைகலப்பு இறுதியில் கொலையில் முடிந்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்ப்பட்டவர் 35 வயதுடைய கியாஸ் எனவும், அவர் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், 2 பிள்ளைகளின் தந்தை என்றும் மனைவி வெளிநாடு சென்ற நிலையில் மாடு மேய்க்கும் தொழில் மேற்கொள்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தம்பலகாமம் பொலிஸார் சந்தேக நபரை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!