பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! யாழ்ப்பாணத்தில் 41 இளைஞர்கள் கைது

698shares

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள இரண்டு விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பையடுத்து 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாகப் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து பொலீசாரும், பொலீஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த விடுதிகளைச் சுற்றிவளைத்துள்ளனர். பொலீசாருக்கு உதவியாக மேலதிகமாக இராணுவத்தினரும் களத்தில் இறக்கப்பட்டிருந்தனர்.

பொலீசாரும், இராணுவத்தினருமாக முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள் நுழைய முடியாமல் படையினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்களை இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்றப்பட்டு சுன்னாகம் பொலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


You may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!