கொழும்பு மத்திய வங்கியிலிருந்து குதித்து தற்கொலை செய்த சிறுவன்! வெளியாகிய அதிர்ச்சி காரணம்

97shares

கொழும்பு மத்திய வங்கி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சிறுவனின் மரணத்திற்கு அவரது தந்தையே தூண்டுதலாக இருந்திருக்கலாம் என அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 6 ஆவது மாடியிலிருந்து சிறுவன் ஒருவன் குதித்து தற்கொலை செய்து கொண்டமை சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. முதற்கட்ட விசாரணைகளில் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

காவல் துறை ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் உயிரிழப்பு தொடர்பில் சந்தேகம் கொண்ட காவல் துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் சிறுவனின் தற்கொலைக்கு தூண்டுதலாக அவரின் தந்தை செயற்பட்டிருக்கலாம் அல்லது இளைஞரின் ஏதேனும் முயற்சிகளுக்கு தந்தை தடையாக காணப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய வங்கியின் உயர் அதிகாரியான தனது தந்தையை சந்திக்க கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் அங்கு சென்ற சிறுவன் 15 ஆவது மாடிக்கு சென்றுள்ளார்.

பின்னர் தந்தையுடன் அரை மணித்தியாலம் வரை சிறுவன் பேசியுள்ளார். தந்தை 2 மணியளவில் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

இதன் போதே சிறுவன் கீழே குதித்துள்ளார். குதிப்பதற்கு முன்னர் ‘Sorry’ என குறுந்தகவல் ஒன்றை தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுவன் தனியார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற நிலையில் 6 ஆவது மாடியில் இருந்து விழுந்தமையினால் அவரது உடல் சிதறிய நிலையில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கோட்டையில் அமைந்து இலங்கை மத்திய வங்கி கட்டடத்தில் இருந்து 12 அடி தூரத்திற்கு சடலம் சிதறிய நிலையில், சடலத்தின் பகுதிகள் ஜனாதிபதி மாவத்தையில் விழுந்து கிடந்ததனை அவதானிக்க முடிந்துள்ளது.

எவ்வாறாயினும், அவர் தற்கொலை செய்துக் கொள்வதற்கான உறுதியான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!