விரைவில் ரணிலிடம் செல்லவுள்ள சிஐடி! சிக்கிய ஆதாரத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

14shares

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு விரைவில் சிஐடியினர் அழைப்பு விடுப்பார்கள் என என இராஜாங்க அமைச்சரும் அரசாங்க ஊடக பேச்சாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

“மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

ஆனால் குற்றப்புலனாய் பிரிவு ரணில் விக்ரமசிங்கவிடம் மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு முன்னர் என்னை கொலைசெய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும்.

என்னை கொலைசெய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கி குரல் பதிவு கடந்த மாதங்களில் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த குரல் பதிவு ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்வுடையதா என உறுதிப்படுத்துவதற்காக ரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது. பகுப்பாய்வு அறிக்கை நேற்றுமுன்தினம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

அதனடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அடுத்தவாரமளவில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கும் என நம்புகின்றேன்” என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!