அரியாலைப்பகுதி அதிகாரிகளால் சோதனை!

69shares

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகர் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிகளவில் வசிக்கும் அரியாலைப் பகுதி இன்று சுகாதாரத்துறையினரால் முற்றுகையிடப்பட்டது. அங்கு முற்றுகையிட்ட சுகாதார துறையினர் அங்குள்ள மக்களுக்கான விழிப்புணர்வுகளை வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள பிலதேனியா தேவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்து போதனை வழங்கிய மத போதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியினைச் சேர்ந்த மற்றுமொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை வைத்திய பரிசோதனை செய்யுமாறும், சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார துறையினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்படி இன்று குறித்த தேவாலயப் பகுதிக்கு அருகில் உள்ள அரியாலை பகுதிக்கு காலை சுகாதார துறையினர் சென்றிருந்தனர். அங்கு சென்ற அவர்கள் பொது மக்களுக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கியதுடன், சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!