ஊரடங்கு உத்தரவால் அவதிப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு

86shares

ஊரடங்கு உத்தரவால் அவதிப்படும் யாழ் மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நேற்றையதினம் கொரோனா தொற்று நபர் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.சுவிஸ் மத போதகருடன் பிராத்தனையில் ஒன்றில் பங்கேற்ற 238 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் ஊடாக சமுதாய பரிமாற்றலூடாக வெளிநபர்களுக்கு நோய் தொற்று வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை இராணுவ முகாமுக்கு அண்மையில் தனிமைப்படுத்தும் முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 238 பேருக்குமான உலர் உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டம் மாவட்ட அரச அதிபர் அலுவலகம் ஊடாக பிரதேச செயலக ரீதியாக நடைபெற இருக்கின்றது.

இதற்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவூடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதி அரசாங்கத்திடம் கேட்டுள்ளோம். இதற்கான பணத்தை உடனடியாக விடுவிக்க பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களிடம் நான் கோரியுள்ளேன்.

இந்த நோயின் பரவலை தடுக்கும் நோக்காக அரசாங்கத்தினால் நாளை காலை 6.00 மணியிலிருந்து மதியம் வரை ஊரடங்கை தளர்த்தி மறுபடியும் மதியத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வரை நீடிக்கப்படவுள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னுமொரு மாவட்ட மக்கள் பயணிப்பதை தடுக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

ஊடரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சிறப்புத் தேவையுடையோரை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள், நாளாந்த கூலி பெறும் விவசாய வேலையாட் குடும்பங்கள், நாளாந்த கூலி பெறும் கடற்தொழிலாளர் குடும்பங்கள், தச்சு வேலை , கட்டுமானத் தொழிலாளி குடும்பங்கள், பனைசார் உற்பத்தியாளர் குடும்பங்கள், சாரதி, போக்குவரத்து உதவியாளர் குடும்பங்கள் மற்றும் நாளாந்த கூலி பெறும் தகுதியான அன்றாடம் தொழிலுக்கு செல்லும் குடும்பங்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்னர். இது சம்மந்தமாக பலர் என்னிடம் கதைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஊரடங்குசட்டம் அமுல்படுத்த முந்தைய நாளே ஜனாதிபதியிடமும், ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவர் தீவாரட்ண அவர்களிடம் கதைத்திருந்தேன்.

ஊரடங்கு நிலைமையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ஒரு செயல் திட்டத்தை முன்மொழிந்தேன். அதனை வரவேற்று இத்திட்டம் யாழ் மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் இத் திட்டம் செயற்படுத்தப்படவேண்டும் என வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவர் என்னிடம் குறிப்பிட்டார்.

இத்திட்டமானது இப்பேரிடரால் வரும் பாதிப்பு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என தெரியவில்லை. அதனால் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு மாத காலத்திற்காவது வாராந்தம் உணவு பொதிக்கான முத்திரை வழங்கப்படவேண்டும்.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 64 ஆயிரத்து 278 குடும்பங்களுக்கு உலர் உணவு தேவையை நிறைவு செய்யப்படவேண்டும் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் 900 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 3 ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

இரண்டு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 4 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

மூன்று அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 4 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

நான்கு அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 5 ஆயிரத்து 600 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

ஐந்து அங்கத்தவருடைய குடும்பத்துக்கு வாராந்தம் ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான பொருள்களும் மாதந்தம் 7 ஆயிரத்து 200 ரூபாய் பெறுமதியான பொருள்களும் வழங்கப்படவேண்டும்.

எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 407.356 மில்லியன் ரூபாய் நிதி முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யுமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ஊடாக வறுமை ஒழிப்புச் செயலணியிடம் கேட்டுள்ளோம்

அந்த பொதியில் அரிசி,மா,சீனி,ரின்மீன்,பருப்பு, சவர்க்காரம் உட்பட 14 அத்தியாவசிய பொருட்கள் காணப்படும்.

இது சம்மந்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்று தயார் செய்யப்பட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.

இதற்கான திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என நம்புகிறேன்.

கிட்டத்தட்ட 64000 குடும்பங்கள் அரசாங்க அதிபர் ஊடாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மற்றும் உடனடி நிவாரண தேவைகருதி 30,000 மெற்றிக்தொன் கோதுமை மா ஏற்றிக் கொண்டு கப்பல் இங்கு வந்து கொண்டிருக்கின்றது. இராணுவத்தினர் ஊடாக யாழ் மாவட்டத்திலுள்ள மிக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இதனை வழங்க கிராமசேவகர் மூலம் நடவடிக்கை எடுக்கபடுகின்றது .

எமது பிரதேச விவசாய மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் விவசாய பயிர்களினது பராமரிப்பபையும் விவசாய செய்கையை தொடர்ந்து செய்யவும் அரசாங்கம் விஷேட அனுமதியளித்துள்ளது.உற்பத்திகளை சம்மந்தப்பட்ட பிரதேச சந்தைகளினுடான விற்பனை செய்ய முடியும்.

நல் உள்ளம் படைத்தவர்களும், சேவை நோக்கம் கொண்ட பல அமைப்புக்கள் எமது சமூகத்தில் காணப்படுகின்றனர். அவர்களும் எம்மவர்களது உடனடி தேவைகளுக்கு உதவ முடியும். அவர்களும் உள்ளூர் உற்பத்திகளை விவசாயிகளிடம் வாங்கி அவர்களுக்கு உதவமுடியும் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

நாங்களும் “அங்கஜன் இளைஞர் அணி” ஊடாக 2000 இற்கு மேற்பட்ட உணவு பொதிகளை தயார்படுத்தியுள்ளோம். நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் பண வசதியற்றவர்களுக்கு மட்டும் கிராம சேவகர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டு வழங்கவுள்ளோம்.

எம் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வேண்டுகிறேன்.

ஊரடங்கு நேரத்தில் சமூக பொறுப்புணர்சியுடன் நடந்து சமூக இடைவெளிகளை பேணுங்கள் இதனூடாக எங்களுக்கு வரும் நோய்த் தொற்றையும் தடுத்து, நோய்த் தொற்றை மற்றவர்களுக்கு வழங்குவதையும் தவிர்க்கலாம்.

வயதான முதியோர்களை பாதுகாக்கும் நேரமிது. அது எமது கடமையும் ஆகும்.

அரசாங்கமும் சுகாதார அமைச்சும் தொடர்சியாக கூறும் நடைமுறைகளை பேணுங்கள் என சகலரையும் வேண்டுகிறேன்.

.............................................................

you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்! மீண்டும் துளிர்விடும் கொரோனா?

சீனாவிலிருந்து வெளிவரும் தகவல்! மீண்டும் துளிர்விடும் கொரோனா?