ஊரடங்கு வேளையில் மக்களின் உணர்வலைகளை புரிந்து கொள்ளாத வங்கிகள்! ஏன் இந்த நிலை?

122shares

வங்கியில் நகை அடகு வைப்பதற்கு சென்றிருந்தவர்களை வங்கி அதிகாரிகள் திருப்பியனுப்பியதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பொது மக்களின் அத்தயாவசிய தேவைகளுக்காக நேற்றைய தினம் காலை 6 மணிலியிருந்து மதியம் 2 மணி வரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொது மக்கள் பொருட்கள் கொள்வனில் ஈடுபட்டதுடன், பலர் வங்கிகளில் தங்களின் பண வைப்பு, மீள் எடுப்பு மற்றும் அடகு வைப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் வங்கிகளுக்குச் சென்ற பொது மக்களில் பலருக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக காலை 10 மணிக்குப் பின்னர் சென்ற பொது மக்களுக்கான சேவைகள் வழங்கப்படாது அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டடனர்.

எனினும், காலை 8 மணியிலிருந்து 10 மணி வரையே வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சேவைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், தங்களுக்கான சேவையினை வங்கி அதிகாரிகள் செய்து தரவில்லை என்றும் பொது மக்கள் விசனமடைந்ததுடன், அதிகாரிகளையும் திட்டித் தீர்த்திருந்தனர்.

அரசாங்கம் தளர்த்தியிருந்தியிருந்த ஊரடங்குச் சட்டத்தின் கால நேரத்திற்குள் வெகு தூரங்களில் இருந்து பயணம் செய்து வரும் பொது மக்களுக்கு அவர்களுக்கான சேவைகளை அதிகாரிகள் வழங்கியிருக்க வேண்டும். ஏனெனில், குறித்த காலப் பகுதிக்குள் அவர்கள் வங்கிக்குச் சென்று சேர்வது மிகக் கடினம் என்பதுடன், ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினால் பொது மக்கள் அதிகளவான இடர்களை சந்திப்பதனை தவிர்க்க முடியாததாகிறது.

இதேவேளை, சில வாடிக்கையாளர்களை மீண்டும் அழைத்து அதிகாரிகள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமையில் அதிகாரிகள் மக்களுக்கான சேவைகள் தொடர்பாக முறையான அறிவித்தல்களை முன்னரே அறிவித்து செயல்படுவது வரவேற்கத்தக்கது என பொது மக்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

ஏனெனில், அவதிப்படும் மக்களின் தேவைகளையும், பதற்றத்தையும் தற்போதைய சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி!  உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!

ஸ்ரீலங்காவில் வெளியான இனவாதத்தை தூண்டும் செய்தி! உடனடி நடவடிக்கை கோரும் ஐக்கிய அரபு இராச்சியம்!