ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!

642shares

ஸ்ரீலங்காவில் இன்றைய தினம்மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 255 பேர் நாடு பூராகவும் உள்ள 21 வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை இந்நாட்டில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நாட்டின் மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நேற்றைய தினம் புதிதாக 5 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

மேலும் நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க
கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

யாழில் தரக்குறைவாக பேசியவரை புரட்டியெடுத்த இளம் யுவதி!

யாழில் தரக்குறைவாக பேசியவரை புரட்டியெடுத்த இளம் யுவதி!