வவுனியாவில் மீன்ரின் மற்றும் பருப்பை பதுக்கிய வர்த்தகருக்கு ஏற்பட்டநிலை

116shares

வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் தகரத்தில் அடைக்கபட்ட ரின்மீன் மற்றும் பருப்பினை பதுக்கிய வியாபாரநிலைய உரிமையாளருக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபையினால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரனோ வைரஸ்தாக்கம் காரணமாக சில அத்தியாவசிய பொருட்களின் விலையினை அரசாங்கம் குறைத்துள்ளநிலையில் அவற்றினை பதுக்கும் செயற்பாடுகளில் சில வியாபார நிலைய உரிமையாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அவற்றை கண்காணிக்கும் செயற்பாட்டில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி நிலாந்தன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். இன்றையதினம் கள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையம் ஒன்றில் அத்தியாவசியபொருட்கள் பதுக்கப்படுவதாக கிடைத்ததகவலுக்கமைய அங்கு சென்ற பாவனையாளர் அதிகாரசபையினர் குறித்த வியாபாரநிலையத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அதிகளவான தகரத்தில்அடைக்கபட்ட ரின் மீன் மற்றும் பருப்பு ஆகியவை பதுக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

குறித்த வியாபாரநிலைய உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யபட்டுள்ளது.

அதேபோன்று , பண்டாரிக்குளம், திருநாவற்குளம்,ஓமந்தை, பட்டாணிசூர்,கூமாங்குளம் போன்ற பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை அதிகவிலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களிற்கு எதிராக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!