கொரோனா பரவலை தடுக்க கடும் தீர்மானங்களை எடுக்க நேரிடும்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

54shares

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டை மீட்க கடும் தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய அமைச்சரவை கூட்டமானது, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றதுடன் இரண்டு மணி நேரமும் கொரோனா வைரஸ் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக மட்டுமே கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வழமையாக அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறும் போது 50 முதல் 60 வரையான அமைச்சரவை பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் எனினும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று பத்திரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த மூன்று அமைச்சரவை பத்திரங்களும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பானவை.

அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டை மீட்க தனக்கு கடும் தீர்மானங்களை எடுக்க நேரிடும் எனக்கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!