தமிழர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் அடாவடி! இராணுவத்தை ஏவுவதாக மக்கள் அதிருப்தி

206shares

முல்லைத்தீவு சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25) மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான அவலோன் எனும் தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் அவலோன் எனும் தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர்.

மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த தனியார் நிறுவன அதிகாரி பிரதேச இராணுவ அதிகாரிக்கு அழைப்பு மேற்கொண்டு தமது நிறுவனம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மீன்பிடியை மேற்கொள்வதை தடுக்குமாறு கூறி அருகில் இருந்த இராணுவ முகாம் படையினரை ஏவி தம்மை தடுத்ததாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர் .

இந்த நிலைமையை அடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் மீனவர்களிடம் தொழில் செய்வதற்கான அனுமதி பத்திரம் போன்றவற்றை பார்வையிட்டு தொழிலில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தினர் .

ஏற்கனவே இந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை குறித்த தனியார் நிறுவனம் தமது பணி ஆட்களை ஏவி தாக்குதலை மேற்கொண்டு மீன்பிடியை தடுத்திருந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது

இந்நிலையில் மீண்டும் மீனவர்கள் தொழிலில் ஈடுபடும் கரையோரங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த நிறுவனம் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களை புகைப்படம் எடுப்பதும் இராணுவத்தை ஏவி கலைப்பதும் குறித்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீனவர்களின் உறவினர்களான பெண்களிடம் கடற்தொழில் எமது பகுதி அமைந்துள்ள கடற்கைரையில் உங்கள் உறவினர்கள் மேற்கொண்டால் உங்களை பணியை விட்டு நிறுத்துவோம் என எச்சரிப்பதாகவும் நிறுவனத்தில் வழங்கப்படும் வேலையை காரணம் காட்டி வேலை வேண்டும் என்றால் கடற்தொழில் செய்வதை இப்பகுதியில் நிறுத்துமாறு அவலோன் நிறுவனம் சண்டித்தனம் செய்வது ஆண்டாண்டு காலமாக மீன்பிடியையே வாழ்வாதாரமாக கொண்ட எம்மை அடக்கும் செயல் எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

தாம் தொடர்ந்தும் இப்பகுதியில் தடையின்றி மீன்பிடியில் ஈடுபட இந்த பணபலம் படைத்த தனியார் நிறுவனத்தின் அடாவடியை நிறுத்தி தருமாறு மீனவர்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்