கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! பிரதமர் மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

109shares

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமூக ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமூக ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன் மக்களுக்கு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் தொடர்பாக போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் தொடர்பாக போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுவதன் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவது உட்பட பிரதமர் மேற்கொண்டுள்ள தீர்மானங்களை வேண்டுமென்றே போலியான முறையில் சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.

நிதியாற்றல் உள்ள இல்லாத அனைவரும் கொரோனா அனர்த்தம் காரணமாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் தேவைகளுக்காக கீழ்த்தரமான முறையில் இவ்வாறான போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவதனைக் கண்டிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இவ்வாறு போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவது தொடர்பாக பிரதமரின் சட்டத்தரணிகள் கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இன்று (2020.03.25) முறைப்பாடொன்றை சமர்ப்பித்தனர்.

கட்சி நிற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் போலியான தகவல்களை சமூகமயப்படுத்தி அரசாங்கத்தின் முயற்சியை குறைகூறுவதற்குப் பதிலாக அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க உதவி வழங்குமாறு அரசாங்கம் அனைத்து சமூக ஊடகங்களிடமும் வேண்டிக்கொள்கிறது.


You May Like This

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!