கொரோனாவால் இத்தாலியில் உள்ள இலங்கையரின் மரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லையாம்

115shares

இத்தாலியின் மெசினோ(miseno) நகரில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை உறுதிப்படுத்த முடியவில்லை என ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மெசினோ நகரில் வசித்த 70 வயதான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கையின் வெளி விவகார அமைச்சின் பேச்சாளரான ருவந்திகா தெல்பிட்டிய தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த​வொரு இலங்கையரும் கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி, உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்துமாறும், அதை அந்நாட்டு ஊடகங்களுக்கு அறிவிக்குமாறும், ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்கு அமைச்சின் பேச்சாளர் அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

you may like this?

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்

“அனைத்து இலங்கையர்களுக்கும் நன்றி” சஜித்