ஊரடங்கு நேரத்தில் மக்களுக்காக களமிறங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்! குவியும் பாராட்டுக்கள்

454shares

ஊரடங்குச் சட்டத்தினால் பல பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்நிலையை சமாளிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் வீரியம் பெற்றிருக்கும் நிலையில் இலங்கையர்களை தற்பாதுகாத்துக் கொள்ள இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகளை உலக சுகாதார அமைப்பும், சீனாவும் பாராட்டியிருக்கிறது.

இதற்கிடையில் ஊரடங்குச் சட்டத்தின் போது பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் பின் நிற்கவில்லை.

இந்தநிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும தமது பகுதிகளில் தவிக்கும் பொது மக்களுக்காக சமைத்த உணவுகளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதுடன், தானே களத்தில் இறங்கி சமைக்கவும் செய்துள்ளார்.

கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்டிருந்த வெள்ள அனர்த்தம் உட்பட பல அவசர கால நிலைமைகளின் போதும் கூட களத்தில் இறங்கி வேலை செய்தவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மக்களின் தேவையறிந்து சேவை செய்யும் மனிதர்களை சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை