திருகோணமலையில் கடற்படையின் தேடுதல் வேட்டையில் சிக்கிய சந்தேகிகள்!

71shares

உலகில் இருந்து அழிந்துபோகும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளை வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் உள்ள சீனன்வெளி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில், ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளுடன் மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான டிங்கி ரக படகை சோதனையிட்டபோது 11 கிலோகிராம் ஆமை இறைச்சி மற்றும் 150 ஆமை முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 36, 44 மற்றும் 50 வயதுடைய திருகோணமலை இளங்கத்துரையை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளுக்காக, சந்தேகநபர்கள், ஆமை இறைச்சி மற்றும் முட்டை, டிங்கி ரக படகு மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

உலகில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றான ஆமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகில் ஏழு வகை கடல் ஆமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து வகைகள் முட்டையிட இலங்கை கடற்கரைக்கு வருவதாக சூழலியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். (இலங்கையில் காணப்படும் ஐந்து வகையான ஆமைகள் ஒலிவ் ரிட்லி ஆமை, லாகர்ஹெட், பச்சை ஆமை, ஹக்ஸ்பில் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை.)

இலங்கை விலங்குகள் மற்றும் தாவர கட்டளைச் சட்டத்தின் மூன்றாம் பந்தியின், பிரிவு 30 இன் படி, ஆமைகள் கொல்லப்படுவது, காயமேற்படுத்துவது, முட்டை சேகரிப்பது, கூடுகளை அழித்தல், ஆமையை வைத்திருத்தல் மற்றும் ஆமையின் பாகத்தை வைத்திருத்தல் ஆகியவை குற்றச்செயல்களாக கருதப்படுகின்றன இத்தகைய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.

இதற்கமைய குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாத அல்லது முப்பதாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதத்தை விதிக்க முடியும் அல்லது இரண்டு வருடங்களுக்கு குறையாத மற்றும் ஐந்து வருடங்களுக்கு கூடாத சிறைத்தண்டனையை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்