அதிகரிக்கும் கொரோனா! வெளியிடப்பட்டது அவசர இலக்கம்!

83shares

கல்முனை மாநகர சபையினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்கும் முகமாக கல்முனையில் அமைந்துள்ள பொது பஸ் தரிப்பிடம் கழுவி சுத்தப்படுத்தப்பட்டது. கல்முனை மாநகர சபையால் அம்பாறை மாவட்டத்தில் கோரானோ தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக பலஎமுன்மாதிரியான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கல்முனை பொது பஸ் தரிப்பு நிலையத்தை துப்புரவு செய்யும் நடவடிக்கைகள் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றஹீப்பின் நெறிப்படுத்தலில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ .அன்சார் முன்னிலையில் மாநகர ஊழியர்களினால் தண்ணீர் இரசாயன தெளிப்புடன் சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் வழிநடத்தலில் கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக மாநகர சபையில் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு கொரோனா வைரஸ் தொற்று சம்மந்தமான தகவல்கள் ஆலோசனைகளை பொது மக்கள் பரிமாறிக் கொள்ள முடியும். இத்தகவல் மத்திய நிலையத்திற்கென 0672059999, 0767839995 எனும் அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!