முற்று முழுதான இராணுவக் கட்டுப்பாட்டில் தாவடி! இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை!

108shares

யாழ்ப்பாணத்தில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானவரின் கிராமமான தாவடி கிராமம் தற்போது முற்று முழுதான இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகளில் சதோசா சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து இன்று வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாவட்டத்தில் இதுவரை ஒரு கொரோனா நோயாளி இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் வசித்த கிராமமான தாவடி கிராமம் பாதுகாப்புத் தரப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் சுமார் 300 குடும்பங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு சதோசா, யாழ் மாவட்ட செயலகம் மற்றும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியன இணைந்து இன்று வழங்கி வைத்துள்ளன. அத்தியாவசிய பொருட்களான கோதுமை அரிசி பருப்பு டின் மீன் போன்ற பொருட்கள் இன்று மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!