தனிமைப்படுத்தலுக்காக தேடப்பட்டு வந்த இலங்கைப் பெண் பிரான்ஸ் சென்றுவிட்டார்

396shares

வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரணியகலகே ஷிரானி பீரிஸ் எனப்படும் பெண்ணே இவ்வாறு நாட்டை விட்டுச் சென்றுள்ளார்.

பன்னிப்பிட்டியவை வசிப்பிடமாகக் கொண்ட இப்பெண் கடந்த 5ஆம் திகதி வெளிநாடு ஒன்றிலிருந்து கடந்த 5ஆம் திகதி இலங்கைக்கு வந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொலிஸார் அவரை தேடியுள்ளனர்.

எனினும் குறித்த பெண் கடந்த 8ஆம் திகதியே பிரான்ஸ் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு சென்ற ஒரு பெண்ணை தேடும் போது இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை

பில் கேட்ஸ் கொடுத்த நிதியினால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரானது! முதல் நபருக்கு பரிசோதனை