உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!

35shares

கொரோனா வைரஸால் உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 268 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் உருவாகி 190 நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் தொற்று நோயாக உருவெடுத்து நிற்கிறது.

சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனாவால் அமெரிக்காதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் சுமார் 85,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 268 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 1,298 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்நகரத்தில் இதுவரை 385 பேர் உயிரிழ்ந்துள்ளனர். நியூயார்க் நகரில் நேற்று ஒரே நாளில் 100க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, ஸ்பெய்ன் நாட்டில் 718 பேரும் இத்தாலியில் 712பேரும் உயிரிழந்துள்ளனது.

மேலும் பிரான்ஸில் 365 பேரும், ஈரானில் 157 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,071 பேர் என குறிப்பிடப்படுகின்றது.


you may like this?

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!