ஊரடங்குவேளையில் வீட்டுக்குள் இருந்து கேட்ட அழுகுரல்! இராணுவத்தினர் செய்த உதவி

2592shares

வீடொன்றில் அழுகுரல் கேட்டநிலையில் அங்கு சென்ற இராணுவத்தினர் சிறுவன் ஒருவன் வலிப்பு நோயால் அவதிப்பட்டநிலையில் அவனை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த சம்பவமொன்று இட்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நண்பகல் வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இராணுவத்தினர் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த பிரதேசத்தில் வீடொன்றில் அழகு குரல் கேட்டதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் குறித்த வீட்டிற்கு சென்று அவதானித்த வேளை சிறுவன் ஒருவனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டிருந்ததை அவதானித்தனர்.

அங்கு விரைந்த இராணுவத்தினர் பெற்றோருக்கு ஒத்துழைப்பு வழங்கி சிறுவனை மோட்டார் வாகனத்தில் தாய் தந்தையருடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த சம்பவமானது குறித்த பிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்