கொரோனாவின் கோரத்தாண்டவம்! ஸ்ரீலங்காவில் பதிவானது முதல் மரணம்!

506shares

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.

அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.

இதேவேனை இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் இதன் தாக்கத்திற்கு தப்பவில்லை. இலங்கையில் தற்போதுவரை 110 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரான 60 வயதுடைய நபருக்கு ஏற்கனவே உயர் குருதி அழுத்தம், நீரிழிவு நிலை என்பவற்றுடன் ஒரு சிறுநீரகம் செயலிழந்திருந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் சீனப்பெண் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 101 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி